கல்லிடைக்குறிச்சி: அதிமுகவினர் தவெகவில் ஐக்கியம்

சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வரும் சூழலில் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி முத்து தலைமையில் அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று (மே 16) தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பாலா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி