தாழையூத்து காவல் நிலைய சரகத்தில், 2019ல் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திசையன்விளை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (30) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த ஒரு மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று (பிப்.21) தாழையூத்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.