விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது சந்தோஷ் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளைஞரின் தலையில் கொத்தினர். படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விகே. புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.