நெல்லையில் 5 பேருக்கு வெட்டு

அம்பை அருகே செட்டிமேடு கிராமத்தில் நிலப் பிரச்சனை காரணமாக மாரிமுத்து மற்றும் செல்வின் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதில் மாரிமுத்து, அவரது மகன் நதீஷ் (20), மகள்கள் நதியா (15), செலிசியா (13) மற்றும் மாமியார் ஆவுடையம்மாள் என 5 பேர் மண்வெட்டியால் வெட்டப்பட்டனர். இது குறித்து போலீஸ் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி