திருமாவளவனை முதலமைச்சர் ஆக்க வேண்டும் - விசிக பொதுச் செயலாளர்

திராவிட கட்சிகள் விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக முன்மொழிந்து அதை நோக்கி நகர்த்த வேண்டும் என விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில், விஜய் மீதுள்ள ரசிக மனோபாவத்தில் எழுந்த ஒரு ஜென்சி அலை என்றும், இது அர்த்தமுள்ள அரசியல் பிரளயம் அல்ல என்றும் சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் உண்மையிலேயே மாற்றம் விரும்பினால், மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதலமைச்சர் ஆக்குவதுதான் சரி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி