பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்ய வந்தபோது நிதியமைச்சர் மரிய வில்சன் ஜெபமாலையுடன் வந்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அது அவரது தனிப்பட்ட நம்பிக்கை என்றும், அதில் தவறில்லை என்றும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த அரசியல் விமர்சகர் மருத்துவர் ஷர்மிளா, “நிர்மலா சீதாராமன் நாளை ராமர் சிலையுடன் வந்தாலும் இதே கருத்தை தெரிவிப்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.