திருமாவளவன் போர்க்குரல் எழுப்பி எழுப்பி இப்போது அமைதியாகிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “திமுக தனது கட்சியைப் பிரித்துவிடுமோ என்று பேசாமல் திருமாவளவன் இருக்கிறார். இந்தியாவிலேயே தலித்துகள் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்ற புள்ளி விவரம் இருக்கிறது. பெண்கள், இளம் பெண்கள் அதிகம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றி திருமாவளவன் கேள்வி கேட்பதில்லை” என்றார்.
நன்றி: NewsTamilTV24x7