தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலையை திடீரென உயர்த்திய மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதன் மூலம் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.