தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க 118 என்ற மேஜிக் எண்ணைத் தொடப் போராடும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று இரவு சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசி வருகின்றனர். தவெக-விற்கு விசிக நாளை ஆதரவு கடிதம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.