காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஏப்., 04) செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றம் செல்லவேண்டும் என ஆசைப்பட்டேன். எனக்கு யாரும் எந்தக் காலத்திலும் கட்டளையிட முடியாது. எனது நோக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. பதவிக்காக நான் போட்டியிடவில்லை. என் நிலைபாட்டை மாற்றியமைக்கிறேன். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சமூக நீதி போராளி இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார்.
நன்றி: News18