ஜார்கண்ட் மாநிலத்தில் SBI வங்கியின் ATM மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அங்கிருந்த ATM இயந்திரத்தை காரில் கயிற்றால் கட்டி இழுத்து சென்று கொள்ளையடித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அதில் 4 நபர் அடங்கிய கும்பல் காரின் உதவியுடன் எந்திரத்தை பெயர்த்து எடுத்து செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், CCTV காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நன்றி:SunNews