கரூர் சம்பவம் நடந்தபோது தவெகவை முடக்க பார்த்ததாக திமுக அரசு மீது தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பனையூரில் இன்று நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களின் முதல் முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீதுதான். கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பிறகு கரூர் செல்ல முயன்ற தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பின்னர் தவெக தலைவர் விஜய்யின் பயணம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.