ஜனநாயகனை முடக்கினால் Disturb ஆகிவிடுவான் என நினைத்தார்கள் - விஜய்

'ஜனநாயகன்' படத்தை முடக்கினால் Disturb ஆகிவிடுவான் என நினைத்தார்கள் என்ற தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நெல்லையில் இன்று (ஏப்., 08) பரப்புரையில் பேசிய அவர், 'ஜனநாயகனை முடக்கியது யார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. விஜய் வெளியே வரக்கூடாது மக்களை சந்திக்கக்கூடாது என கன்டிசன்ஸ் போட்டார்கள். எத்தனை சோதனைகள், வேதனைகள் கொடுத்தாலும் சரி, என்னை ஒன்றும் செய்ய முடியாது. மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது' என்றார்.

தொடர்புடைய செய்தி