உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போரை முடிக்க விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ரஷ்ய அதிபர் புதின் நிராகரித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பொருளாதார கருத்தரங்கில் பேசிய புதின், அமைதி ஒப்பந்த நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை ஜெலென்ஸ்கியைச் சந்திப்பதில் பயனில்லை என்றும், ராணுவ இலக்குகள் எட்டப்படும் வரை தாக்குதல் தொடரும் என்றும் கூறினார். இக்கோரிக்கைகளைச் சரணடைதலுக்குச் சமம் என உக்ரைன் மற்றும் அதன் கூட்டாளிகள் மறுத்துள்ளனர்.