பாமகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் நேற்று (மே 16) கட்சியில் இணைந்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதலமைச்சராக கடந்த வாரம் விஜய் பொறுப்பேற்றார். இந்த நிலையில், மாற்றுக்கட்சியினர் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையை தங்கள் கோட்டையாக மாற்றியுள்ள தவெக, கொளத்தூர் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி