திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜகவைச் சேர்ந்த 25 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். நேற்று (பிப்., 16) திருவள்ளூர் திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.