சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், சி.வி. சண்முகம் எம்.பி. முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு கட்சியினரை அதிமுக தொடர்ந்து தங்களுடன் இணைத்து வருகிறது.