பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு நேற்று (ஆகஸ்ட் 20) முன்மொழிந்துள்ளது. இது குறித்து பேசிய கனிமொழி MP, எதிர்க்கட்சிகளுக்கு மசோதாக்களை வாசிக்கக்கூட அவகாசம் தராமல், கூட்டத்தொடரின் கடைசி நாளில் மசோதாக்களை தாக்கல் செய்யும் பழக்கத்தை மத்திய அரசு வழக்கமாக செய்வதாக விமர்சித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தை சீர்குலைக்க ஒன்றிய அரசு செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.