எனக்கு போன் செய்து ரூ.15 கோடி பேரம் பேசினார்கள்: MLA முஸ்தபா பேட்டி

தவெக அரசை கவிழ்க்க திமுக-அதிமுக இணைந்து சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க அதிமுகவினர் தன்னிடம் ரூ.15 கோடி வரை பேரம் பேசியதாகவும் MLA முஸ்தபா தெரிவித்தார். மதுரையில் இன்று பேட்டியளித்த அவர், முன்பணமாக ரூ.15 கோடியும், பின்னர் ரூ.15 கோடியும் தருவதாக தொலைபேசி வாயிலாக கூறப்பட்டதாகவும், ரூ.100 கோடி கொடுத்தாலும் தவெக MLA-க்களை வாங்க முடியாது என்றும் கூறினார். மேலும், விரைவில் இந்த சதியின் பின்னால் உள்ளவர்களின் விவரங்கள் வெளியாகும் என பேசினார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕