”அரைகுறை தன்மையோடு நிர்வாகத்தை நடத்துகின்றனர்”.. தவெகவை சாடிய செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் டெண்டர், கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், “ஹார்ட் டிஸ்க் மாயம் விவகாரத்தில் ஏன் துறைவாரியான நடவடிக்கை எடுக்கவில்லை?. அரசு மாறலாம், அதிகாரிகள் மாற மாட்டார்கள். டெண்டர் வழங்குவதில் யாரும் தவறு செய்ய முடியாது. அரைகுறை தன்மையோடு நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி