பாரம்பரிய காரணி மற்றும் தவறான உணவு பழக்கம் மட்டுமன்றி, மன அழுத்தம், சீரற்ற தூக்கம் மற்றும் உடலுழைப்பற்ற வாழ்வியல் முறை போன்ற எதிர்பாராத காரணங்களாலும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இரவில் தாமதமாக தூங்குவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது ஆகியவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென உயர்த்தக்கூடும். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீரிழிவு நோயின் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.