தமிழகத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (ஜூன்.04) காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை தமிழகத்தின் முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். சென்னை (திருமுல்லைவாயல்), பூவிருந்தவல்லி, கோவை (சரவணம்பட்டி, ஜி.என்.மில்), திருப்பூர், உடுமலைப்பேட்டை, கன்னியாகுமரி (கோவளம், சுசீந்திரம்), தருமபுரி (மாம்பட்டி), தஞ்சாவூர் (வடசேரி) ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.