மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதிகனமழை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குன்னூர் பி.டி.ஓ 26 செ.மீ., தென்காசி கடனா அணை பகுதியில் 24 செ.மீ., தென்காசி சிவகிரியில் 17 செ.மீ., ராமநதி அணை, தேனி வீரபாண்டியில் 12 செ.மீ., மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.