விவசாய நிலத்திற்குள் புகுந்த அனல் மின் நிலைய கழிவுகள்.. விவசாயிகள் வேதனை

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தின் பின்புறம் உள்ள சேமிப்பு பகுதியில் இருந்து சாம்பல் கலந்த நீர் கசிந்து அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 10 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்காச்சோளம், வெங்காயம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சாம்பல் கழிவு மேலும் பரவாமல் தடுக்க அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕