"திமுகவை வெல்ல ஒருவர் பிறந்து வர வேண்டும்" என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று (பிப்.9) கூறியதாவது, “100 இடங்களில் வென்று கலைஞர் முதலமைச்சராக இருந்தாரே, ஆட்சியில் பங்கு கொடுத்தாரா?. 150 இடங்களில் திமுக ஜெயிக்கும் போது எப்படி கொடுக்கும்?. நீங்கள் வேண்டுமென்பதை கேளுங்கள்; செய்து தருகிறோம். எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது.