மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியை 30% வரை அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக விநியோகத்தை உறுதி செய்ய 25% ஆக இருந்த உற்பத்தி அளவு, தற்போது மேலும் உயர்த்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.