திமுக கூட்டணியில் உள்ள வைகோவுக்கு ராஜ்யசபா சீட் தராதது அவர் வருத்தமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும், கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்து மதிமுக-வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறுகையில், “2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு. ஜூன் 22-ல் மதிமுக பொதுக்குழு கூடுகிறது. தேர்தல் வியூகம் பற்றி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.