தேர்தல் களத்தில் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்கும் தவெகவிற்கு, பணம் பெரிய சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், “தவெக-வில் சுமார் 70 வேட்பாளர்களுக்கு நிதி வழங்க முடியும். ஆனால், மற்ற அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு நிதியளிப்பது தவெகவுக்கு கடினமாக இருக்கும். கூட்டணிக்குச் சென்றால், நிதிச் சுமையை குறைக்க முடியும். அதற்குப் பதிலாக, கட்சி வியூகம் மற்றும் தேர்தல் பணிகள் மீது கவனம் செலுத்தலாம்” என்கின்றனர்.