தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். தவெக நிகழ்ச்சியில் இன்று (மே.28) பேசிய அவர், “உதயநிதி முதலமைச்சராகவும், இபிஎஸ் துணை முதலமைச்சராகவும் வர ஒரு கூட்டுச் சூழ்ச்சி நடந்தது. இதற்காகவே புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாகக் கையெழுத்து கேட்கப்பட்டது. இந்தச் சூழ்ச்சியை முதன்முதலில் எதிர்த்தது கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிகவும்தான்” என்றார்