ஆந்திரா கடப்பா மாவட்டம் துவ்வூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் (19) என்ற வாலிபர் விடுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் படுகாயமடைந்து அதிக இரத்தப்போக்குடன் வீட்டிற்குத் திரும்பிய சிறுமியின் நிலையைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் துவ்வூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.