காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்று (பிப்.11) நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பு மனநிலையும் மக்களிடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத வலுவான கட்டமைப்பு திமுகவிடம் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், சென்னை மற்றும் வடதமிழகம் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்ட வேண்டும் என கூறியுள்ளார்.