திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் தங்குவதற்கு எந்தவிதமான தடையும் அறிவிக்கப்படவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கனமழையின் போது மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.