ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பான விசாரணை இன்று (ஜன.15) நடைபெற்றது. அப்போது இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ஜனவரி 20 ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படம் ரிலீஸ் தான் தங்களுக்கு பொங்கல் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.