மத்திய அரசின் எத்தனால் கொள்கையால் தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எந்தவித தனிப்பட்ட லாபமும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்ப நிறுவனங்கள் இதன் மூலம் பலனடைந்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று அவர் மறுத்துள்ளார். நாட்டின் மொத்த உற்பத்தியில் தனது நிறுவனத்தின் பங்கு வெறும் 0.07% மட்டுமே என்றும், இக்கொள்கை அரசு எடுத்த கூட்டு முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.