தவெக அமைச்சர்கள் சமீப காலமாக ‘அடுத்த பிரதமர் விஜய் தான்’ என கூறி வருகிறார்கள். இதுகுறித்து எம்பி துரை வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “விஜய் பிரதமராக வர வேண்டும் என ஆர்வ மிகுதியால் சிலர் கூறி வருகின்றனர். இதை பெரிதுபடுத்த தேவையில்லை. மசவெ கூட்டணி இந்தியா கூட்டணியின் அங்கமாக உள்ளது. பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கும்போது கூட்டணியில் உள்ள அனைவரும் அந்த முடிவுக்கு கட்டுப்படுவார்கள்” என்றார்.