"குறுக்கு வழியில் ஆதாயம் தேட அதிமுகவுக்கு அவசியமில்லை".. ஆர்.பி.உதயகுமார்

அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் எம்எல்ஏ முஸ்தபாவின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்ற அவர், அரசின் ஊழல்களை திசை திருப்புவதற்காக அதிமுகவின் பெயரை பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என MLA முஸ்தபாவுக்கு உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕