அமெரிக்கா-ஈரான் இடையேயான 14 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஆதரவு அளித்தாலும், அது லெபனான் பகுதிக்கு பொருந்தாது என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த போது அனைத்து பகுதிகளிலும் அமைதி திரும்பும் என கூறப்பட்ட நிலையில், இஸ்ரேலின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.