தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு, சில முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதிகள் குறித்த புதிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், தவறான விவரங்கள் அளித்தவர்கள் ஆகியோருக்கு இந்த கடன் தள்ளுபடி கிடைக்காது என கூறப்படுகிறது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.