சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தற்போது தடை மட்டும் பெற்றுள்ளோம். கூடிய விரைவில் வழக்கை ரத்து செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார். மேலும், நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என கூறினார்.
நன்றி: சன் நியூஸ்