“பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. திமுக கூட்டணியோடு ராமதாஸ் தலைமையிலான பாமக வருவதற்கு வாய்ப்புகள் இதுவரை தென்படவில்லை. இந்த முறை திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரமும் மரியாதையும் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.