அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில்காலம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தென்மண்டல வானிலை மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் நடப்பு ஆண்டு தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 94 சதவிகிதம் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.