நிதியாண்டின் கடைசி மாதமாக மார்ச் இருப்பதால், 31ஆம் தேதி பொதுவாக கணக்குகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெறும். இந்த நிலையில் நாளை (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலில் வங்கிகள் செயல்படாது என செய்திகள் வெளியாகின. ஆனால், கணக்குகளை முடிக்கும் வகையில் நாளை வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் வழக்கம்போல நாளை வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என தெரிகிறது.