விஜய்யுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி உடன் இருக்கும் ஓபிஎஸ்-க்கு இதில் சம்மதம் என கூறினாலும், அவருடன் இருப்பவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். விஜய் கட்சி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், பல்வேறு அரசியல் கட்சிகள் அவருடன் இணைவதற்காக முயற்சிகள் நடத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்தி