மனித உடலில் மனித செல்களைவிட அதிகமான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன என்பது வியப்பூட்டும் உண்மை. இது நல்ல பாக்டீரியாக்கள் எனவும் இவை ஜீரண செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி, வைட்டமின் உற்பத்தி போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவும் கூறப்படுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியா உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அதனால் தான் “Gut Health” என்பது மனித உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.