மதுரை: தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காப்பாற்றிய போலீசார்

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர் மேட்டு தெருவை சேர்ந்த கணேசனின் மகன் குட்டி கமல் (27) என்பவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி மூன்று தவணைகள் கட்டிய நிலையில் கடந்த சில மாதங்களாக கட்டவில்லை. தற்போது கட்ட முடியாமல் இருப்பதால் அவரை நிதி நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் பணத்தை கட்டுமாறு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

 இதனால் மனம் விரக்தி அடைந்த குட்டி கமல் நேற்று (மார்ச் 19) மாலை இருசக்கர வாகனத்தில் வந்து திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி மேம்பாலத்தின் சுவரின் மேற்பகுதியில் அமர்ந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக கூறி தலையில் ஹெல்மெட்டுடன் குதிக்க முயற்சி செய்தார். அப்போது திருப்பரங்குன்ற பங்குனி திருவிழாவிற்கு பாதுகாப்பு பணியிலிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் முதல் நிலை காவலர் அய்யனார் ஆகியோர் குட்டி கமலிடம் கெஞ்சி குதிக்க வேண்டாம் உனக்கு என்ன உதவி வேண்டுமோ செய்து தருகிறோம் என கூறி மிகவும் லாவகமாக பேசி அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளி காப்பாற்றினார். 

அதன் பின்பு அவரது தந்தை கணேசன் மற்றும் குடும்பத்தினரும் அழைத்து பேசி இனிமேல் இதுபோன்று தவறுகளை செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி