மதுரை: விஷப் பூச்சி கடித்து கொத்தனாருக்கு நேர்ந்த பரிதாபம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி(45) என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் இனம் தெரியாத பூச்சி கடித்துவிட்டது. 

இதனால் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலும் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (ஜன.2) உயிரிழந்தார். இதுகுறித்து மகன் கருப்பையா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி