மதுரை: 6 பீரோக்களை உடைத்து 32 பவுன் நகைகள் திருட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டை மீனாட்சி நகரில் வசிக்கும் சீனிவாசன் (70), பேபி கமலம் (67) தம்பதிக்கு நான்கு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மற்றவர்கள் ஓரே குடும்பமாக நடுக்கோட்டையில் வசித்து வருகின்றனர். லாரிகள் வைத்து தொழில் செய்கின்றனர். 

இவர்கள் அனைவரும் டிச. 25ல் பழநிக்கு பாதயாத்திரை சென்று விட்டு, நேற்று (டிச. 30) அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த 6 பீரோக்களும் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 32 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி