ரோட்டோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு லாரியும், கன்டெய்னரும் தனித்தனியாக பிரிந்து கவிழ்ந்து விழுந்தன. இதில் டிரைவர் தங்கராஜ் காயமடைந்ததால் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்பட்ட போது நல்வாய்ப்பாக எந்த வாகனங்களும் வராததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணைய நெடுஞ்சாலை விபத்து மீட்பு பிரிவினர், போலீசார் உடனே கவிழ்ந்த லாரியையும், கன்டெய்னரையும் கிரேன் உதவியோடு மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்