ஓட்டுநரை கொலை செய்த இறைச்சிக் கடைக்காரர் கைது

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகேயுள்ள சந்தையூரைச் சேர்ந்த முருகன் (34). கோழி இறைச்சி விற்பனைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிகா. இவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். முருகன் ஏற்கெனவே பணிபுரிந்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் மெய்யனூத்தம்பட்டியைச் சேர்ந்த ஐயப்பனுடன் (38) ஜோதிகாவுக்கு தொடர்பு இருந்தது. இதையறிந்த முருகன் மனைவி ஜோதிகாவைக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று(செப்.29) அதிகாலை இறைச்சிக் கடையில் இருந்த முருகன் பால் வாங்கிக் கொடுக்க வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் ஐயப்பனும், ஜோதிகாவும் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஐயப்பனைக் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொலை செய்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி