தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் இன்று நடந்த சாலை விபத்தில், பைக் சக்கரத்தில் துணி சிக்கி பின்னால் அமர்ந்திருந்த தாய் உயிரிழந்தார். இளைஞர் ஒருவர் தனது தாயாருடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. தென்கரை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.